/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகத்துக்கு களப்பயணம்: மாணவர்கள் உற்சாகம்
/
நுாலகத்துக்கு களப்பயணம்: மாணவர்கள் உற்சாகம்
ADDED : நவ 03, 2025 01:46 AM

உடுமலை: ஆர். கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நுாலகத்துக்கு, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித்தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நுாலக பொறுப்பாளர் சத்யா வரவேற்றார். நுாலகர் லட்சுமணசாமி, 'புத்தகம் என்னும் அறிவாயுதம்', என்னும் தலைப்பில் பேசினார்.
வாசகர் வட்ட உறுப்பினர் கணபதி, 'நூலகத்தின் சிறப்புகளும் வாழ்வியல் மேம்பாடும்,' என்னும் தலைப்பில் பேசினார். திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், 'நுாலகத்தினால் உயர்ந்தவரும் நுால்களின் சிறப்பும்,' என்ற தலைப்பில் பேசினார்.
மாணவ, மாணவியர் நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதன் வேலை நேரம், செயல்பாடுகள், புத்தக உண்டியல் திட்டம், வீட்டுக்கொரு நுாலகம் குறித்தும், வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்விளக்கமளிக்கப்பட்டது.
தாங்கள் படித்த நூல்கள் குறித்து மாணவ, மாணவியர் பேசினர். மாணவி லத்திகா நன்றி தெரிவித்தார்.

