/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிந்து மெட்ரிக் பள்ளி விழா மாணவர்கள் உற்சாகம்
/
சிந்து மெட்ரிக் பள்ளி விழா மாணவர்கள் உற்சாகம்
ADDED : மார் 16, 2025 12:00 AM

திருப்பூர்: தாராபுரம், சிந்து மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக இன்ஜினியர் காயத்ரி, டாக்டர் பிரணவ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள், பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், கலைநிகழ்ச்சிகள், யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.