/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு
/
கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 15, 2025 08:23 PM

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி விழா நடந்தது.
விளையாட்டு விழாவில், கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற உடற்கல்வி துணை இயக்குனர் வெங்கடேசன், திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மாணவி நவரஞ்சனி, மாணவன் குணசேகர் சாம்பியன் பட்டம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்லுாரி மற்றும் விடுதி ஆண்டு விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., பதிவாளர் நரேந்திரபாபு, கல்லுாரி ஆண்டு மலரை வெளியிட்டு பேசுகையில், ''கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடைகள் நலம், உற்பத்தி திறனை அதிகரித்தல், நோய் வரும் முன் காத்தல், பொது சுகாதாரம், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சுகாதாரமான கால்நடை சார்ந்த உணவு பொருட்களை சமூகத்துக்கு அளித்தல் என பல கடமைகள் உள்ளது. இதை உணர்ந்து, மாணவர்கள் செயலாற்ற வேண்டும்,'' என்றார்.