/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா யோகாசன போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்
/
சகோதயா யோகாசன போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : நவ 17, 2024 04:45 AM

திருப்பூர்: திருப்பூர் சகோதயா (சி.பி.எஸ்.இ.,) பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், ஒன்பதாவது யோகாசன போட்டிகள் பெருமாநல்லுார், கே.எம்.சி., பள்ளியில் நடைபெற்றது.இதில், பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
யோகாசன போட்டிகளை கே.எம்.சி., பப்ளிக் பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகியம்மாள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர், தலைமை செயல் அலுவலர் சுவஸ்திகா முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டி 12 வயது முதல் 19 வயது பிரிவு வரை 12 பிரிவுகளாக நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் தேவராஜன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்வழங்கினார்.