/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் கூடுதல் இடம் விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு
/
சிக்கண்ணா கல்லுாரியில் கூடுதல் இடம் விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு
சிக்கண்ணா கல்லுாரியில் கூடுதல் இடம் விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு
சிக்கண்ணா கல்லுாரியில் கூடுதல் இடம் விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு
ADDED : மே 10, 2025 01:01 AM
திருப்பூர், : திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டு, கூடுதலாக, 200 இடங்கள் செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, 60வது கல்வியாண்டில் காலடி எடுத்து வைக்கிறது. கல்லுாரியில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு, வேதியியல் இயற்பியல், கணிதம், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம், விலங்கியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல், சர்வதேச வணிகவியல் என 14 பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலைப் பட்டப் பிரிவுகளில், 17 பாடப்பிரிவு, முதுநிலை பாடப்பிரிவுடன் சேர்த்து, 3 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
நடப்பு (2025) கல்வியாண்டு, ஷிப்ட் - 2வில் (மதிய வகுப்பு) வணிகவியல் (பி.காம்.,) - 60, வணிகவியல் கணினி பயன்பாடு (பி.காம்., சி.ஏ.,) - 60, சர்வதேச வணிகவியல் (பி.காம்., ஐ.பி.,) - 50 என, 170 இடங்கள் புதியதாக துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கெனவே முதல் ஷிப்ட் (காலை) உள்ள இளநிலை வேதியியல், இயற்பியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில், கூடுதலாக, 30 இடங்களும் சேர்த்து, மொத்தம், 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வரும், 27ம் தேதி வரை, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக புதிய பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சந்தேகம் இருப்பின், கல்லுாரி வளாகத்தில் செயல்படும் மாணவர் சேர்க்கை வழிகாட்டி மையத்தை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நாடலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.