/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய விண்வெளி தின போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
/
தேசிய விண்வெளி தின போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
தேசிய விண்வெளி தின போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
தேசிய விண்வெளி தின போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED : ஆக 25, 2025 09:27 PM

உடுமலை; உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், தேசிய விண்வெளி தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய விண்வெளி தினம் சிறப்பு போட்டிகள் நடந்தது. விழாவில் கல்லுாரி பேராசிரியர் நந்தகுமார் வரவேற்றார்.
கல்லுாரி பொறுப்பு முதல்வர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் கருணாநிதி, பட்டயத்தலைவர் சக்ரபாணி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கான வினாடிவினா, போஸ்டர் தயாரித்தல், மாதிரி பொருட்கள் கண்காட்சி, ஓவியப்போட்டிகள் நடந்தது.
சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து விஞ்ஞானி வைத்தியநாதன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி, சங்கச்செயலாளர் நாகராஜ், தேஜஸ் ரோட்டரி சங்க உறுப்பினர் சத்யம்பாபு முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொலைநோக்கி, அறிவியல் சார்ந்த உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார்.