/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலை இலக்கிய போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்பு
/
கலை இலக்கிய போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 24, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை புத்தக திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது.
உடுமலை புத்தகாலயம் மற்றும்- திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் சார்பில், உடுமலை தேஜஸ் மகாலில், வரும் டிச., 7 முதல், 16 ம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
10வது உடுமலை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. பேச்சு, ஓவியம், கட்டுரை என நடந்த போட்டிகளில், உடுமலை சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த, 500 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.