/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்
/
அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜன 29, 2025 10:52 PM

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கழிப்பறை சுகாதாரமில்லாததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவில் படிக்கின்றனர். கல்லுாரியில் கழிப்பறை துாய்மையில்லாமல் இருப்பது, மைதானம் பராமரிப்பில்லாதது, சீரான குடிநீர் வினியோகம் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லுாரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு, கல்லுாரி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என, மாணவர்கள் தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர் பேச்சு நடத்திய பின், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கல்லுாரி முதல்வர் கல்யாணி கூறுகையில், 'கல்லுாரியில் கழிப்பறை துாய்மைப்படுத்துவதற்கு வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதுதான் இந்த பிரச்னைக்கு காரணம். கூடுதல் பணியாளர்கள் நியமித்து, சுகாதாரம் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றார்.