/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில சதுரங்க போட்டிக்கு மாணவ, மாணவியர் தேர்வு
/
மாநில சதுரங்க போட்டிக்கு மாணவ, மாணவியர் தேர்வு
ADDED : அக் 07, 2025 11:54 PM

திருப்பூர்; பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி திருப்பூர் பிரன்டலைன் பள்ளியில் நடந்தது.
ஏழு குறுமையங்களில் முதல் மூன்றிடம் பெற்ற, 338 மாணவ, மாணவியர், மாவட்ட போட்டியில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், திருப்பூர் மாவட்ட சதுரங்க தலைவர் சக்திநந்தன் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர்.
முதல் மூன்றிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள்:
பதினோரு வயது மாணவர் பிரிவில், விசாகன் (பிரன்ட்லைன்), தேவதருண் (விகாஸ் வித்யாலயா), சித்தேஷ் (எம்.எஸ்.பள்ளி) மற்றும் மாணவியர் பிரிவில், லட்சுமிதேவி (கொங்கு மெட்ரிக்), பிரிதிவிகா (எம்.எஸ். வித்யாலயா), வைபவி (எஸ்.கே.எல்.பப்ளிக்).
பதிநான்கு வயது மாணவர் பிரிவில், அபினேஷ் (பிரன்ட்லைன்), நிரஞ்சன் (எஸ்.கே.எல்), பிரணவர்ஷன் (மெஜஸ்டிக் பள்ளி)மற்றும் மாணவியர் பிரிவில், ராஜேஸ்வரி (விகாஸ் பள்ளி), மஹதி (விவேகானந்தா வித்யாலயா), சவுபர்நிகா (ஊராட்சி ஒன்றியப்பள்ளி).
பதினேழு வயது மாணவர் பிரிவில், ஆகாஷ் (இந்திராகாந்தி பள்ளி), ஸ்ரீராம் (செஞ்சுரி பவுண்டேஷன்), ஸ்ரீஹரி (ஜே.எஸ்.ஆர். மடத்துக்குளம்) மற்றும் மாணவியர் பிரிவில் ஹாசினி, சவுமியா தேவி (முருகு மெட்ரிக்), திரிட்னா மெர்சி (இன்பான்ட் ஜீசஸ்).
பத்தொன்பது வயது மாணவர் பிரிவில், மாதவன் (பிஷப் உபஹாரசாமி), அஜய் ஜோ லுாயிஸ் (ஜேசீஸ் மெட்ரிக்), மிதிலேஷ் (பிரன்ட்லைன்) மற்றும் மாணவியர் பிரிவில் ஆதிசம்ரிதா (ஸ்ரீ சாய் மெட்ரிக்), ஜோசி ஜெயவர்சனி (இன்பான்ட் ஜீசஸ்), நவிகா (முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி)
வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.