/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்
/
விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்
விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்
விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்
ADDED : ஆக 31, 2025 12:47 AM

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாணவ, மாணவியரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சமூகத்திறன்களை வளர்க்கவும், விளையாட்டு உதவுகிறது.
சிக்கண்ணா அரசுக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் நம்முடன் பகிர்ந்தவை:
படித்து வரும் மாணவர்களிடம் விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் குறைவாகத்தான் இருக்கிறது. விளையாட்டின் முக்கியத்துவத்தை அனைத்து மாணவர்களும் உணர வேண்டும். விளையாடும்போது அனைத்துவித நெருக்கடிகளையும் ஒருவன் மறந்து விடுகிறான். அனைத்தையும் மறக்கும்போது மனதில் உள்ள பாரம் குறையும். உள்ளம் தெளிவடையும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள மனம் தயாராகும். எளிமையாக கவனம் செலுத்தி ஒன்றைக் கற்க முடியும். அதுவே தன்னம்பிக்கையை வளர்க்கும்; தன்னம்பிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும். நோயின்றி வாழவும் உதவும். உடலளவில் இத்தகைய நன்மைகளைக் கொடுத்தாலும் சமூக அளவிலும் விளையாட்டால் உயர முடியும். அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. எனவே விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு போட்டி என்று நடத்தலாம். விளையாட்டு வல்லுனர்களை வரவழைத்து கலந்துரையாடல் நடத்தலாம்.
---
சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான ஹாக்கிப்போட்டியில் மாணவியர் இடையே நடந்த மோதல்.

