/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதைக்கு எதிராக மாணவர்கள் சபதம்
/
போதைக்கு எதிராக மாணவர்கள் சபதம்
ADDED : ஜூன் 26, 2025 11:43 PM

திருப்பூர்; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கலெக்டர் மனீஷ் நாரணவரே, கொடியசைத்து பேரணியை துவக்கிவைத்தார்.
எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று திரும்பி, எல்.ஆர்.ஜி., கல்லுாரியை அடைந்தது. போதைப்பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் தீபா, மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், உதவி கமிஷனர் (கலால்) செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவிநாசி
அவிநாசி போலீசார், திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் அவிநாசியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அவிநாசி அரசு கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் துவக்கி வைத்தார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி., பாலமுருகன், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. பேரணி, புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்க கோவை மெயின் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது.
---
2 படங்கள்
திருப்பூர் நஞ்சப்பா பள்ளி மற்றும் அவிநாசியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.