/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
/
'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
ADDED : ஜூலை 08, 2025 09:01 PM

உடுமலை; பள்ளி இறைவழிபாட்டு கூட்டத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மாணவர்கள் 'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து, பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் சமூகம், பொருளாதாரம், பண்பாட்டு தளத்தில் அவர்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அனைத்து பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கும், மாணவர்கள் 'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டயகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் காலை இறை வணக்க கூட்டத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.