/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்கள்
/
சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்கள்
ADDED : பிப் 06, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி குறுமைய சதுரங்கப்போட்டியில், திருப்பூர் முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹாசினி 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், மாணவர் தக் ஷன் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றனர்.
சர்வதேச சதுரங்க 'பிடே' தரவரிசையில் ஹாசினி 1563 மதிப்பெண்கள்; தக் ஷன் 1542 மதிப்பெண்களும் பெற்ற சர்வதேச போட்டியாளர்களாக உள்ளனர். ஹாசினி, தக் ஷன் ஆகியோர் மாநில, மாவட்ட அளவில் பரிசுகளை வென்றுள்ளனர். இவர்களையும், இச்சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் கண்ணனையும் பள்ளித் தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா பசுபதி ஆகியோர் பாராட்டினர்.

