/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்
/
கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்
ADDED : ஜன 16, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 சார்பில், சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாட்டுப்பொங்கல் நாளில் மாணவ, மாணவியர் தங்களது வீடுகளில் முன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். டிராபிக் சிக்னல், சாலை போக்குவரத்து குறியீடு, ெஹல்மெட் அணிவதன் அவசியம், சீட்பெல்ட் உள்ளிட்டவற்றை கோலத்தில் சேர்த்திருந்தனர். வாகன ஓட்டிகளுக்கும், ஊர்மக்களுக்கும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

