/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படைப்பாற்றலை நிரூபித்த மாணவர்கள்
/
படைப்பாற்றலை நிரூபித்த மாணவர்கள்
ADDED : அக் 31, 2025 12:00 AM

திருப்பூர்:  திருப்பூரில் உள்ள 'நிப்ட் -டீ' நிட்வேர் பேஷன் கல்லுாரியின் அப்பேரல் பேஷன் டிசைன் துறை சார்பில், டிசைன் கண்காட்சி, நேற்று கல்லுாரி வளாகத்தில் துவங்கியது.இயற்கை சார்ந்த, வரலாறு மற்றும் மரபு சார்ந்த, ஜியோமெட்ரிக், பயோ டிசைன் என பல்வேறு கருப்பொருட்களில், 12 வகையான டிசைன்களை மாணவர்கள் உருவாக்கி, காட்சிப்படுத்தியிருந்தனர்.
துவக்க விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பூபதி விஜய், வரவேற்றார். லக்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் செயல் இயக்குனர் ராகுல் குமார் தோடி, முதன்மை விருந்தினராக பங்கேற்றார். வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சிவபெருமாள் டேவிட், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் திறமையை பாராட்டி பேசினர்.
வால்ரஸ் நிறுவன ஆலோசகர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பேசினர். மாணவர்களின் படைப்பாற்றல், புதுமை மற்றும் தொழில் சார்ந்த கற்றலின் பிரதிபலிப்பாக இக்கண்காட்சி அமைந்தது.'நிப்ட் டீ' கல்லுாரி டீன் சம்பத், நன்றி கூறினார். தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மாணவர்களின் படைப்பாற்றலை பாராட்டினர். நாளை (2ம் தேதி) வரை இக்கண்காட்சி நடக்கிறது.

