/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் மன்ற விழா போட்டி பரிசு வென்ற மாணவர்கள்
/
தமிழ் மன்ற விழா போட்டி பரிசு வென்ற மாணவர்கள்
ADDED : டிச 27, 2024 11:42 PM

அவிநாசி; தமிழ் வளர்ச்சித் துறையும், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையும் இணைந்து கருணாநிதி நுாற்றாண்டு தமிழ் மன்ற விழாவை நடத்தின.
கடந்த 17ம் தேதி பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தன. தமிழரசன், தரணிதரன், கீர்த்தனா ஆகியோர் முதலிடம் பெற்று 5000 ரூபாய்க்கான காசோலை, சான்றிதழ்; தனப்பிரியா, கீர்த்தனா, நர்மதசுவேதா ஆகியோர் இரண்டாமிடம் பெற்று 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, சான்றிதழ்; தரணிதரன், தமிழரசன், ரேணுகாதேவி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்று 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, சான்றிதழ் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.