/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டல் - பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
/
ஓட்டல் - பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ADDED : நவ 19, 2024 06:23 AM
பல்லடம்; பல்லடம் நகர, வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வு நடந்தது.
பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பறிமுதல் செய்யப்பட்டன. சுகாதாரமின்றி செயல்பட்ட, 14 கடைகளுக்கு, மொத்தம், 11,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள், 11 கிலோ மற்றும் அதிக வண்ணம் கொண்ட கார வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 725 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
பாலிதீன் பைகள், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.