/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் திருவிழா: ஏற்பாடுகள் ஆய்வு
/
பொங்கல் திருவிழா: ஏற்பாடுகள் ஆய்வு
ADDED : ஜன 13, 2024 11:39 PM
திருப்பூர்;திருப்பூரில் மூன்று நாள் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பொங்கல் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது.
திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு கழகம் நடத்தும் பொங்கல் திருவிழா வரும் 15, 16 ஆகிய தேதிகளிலும், ஜீவநதி நொய்யல் சங்கத்துடன் இணைந்து நடத்தும் பொங்கல் விழா 17ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது.
திருப்பூர் வளர்மதி பாலம் பகுதியிலிருந்து நொய்யல் கரையின் இரு புறங்களிலும் இந்த விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக இரு ரோடுகளிலும் சீரமைப்பு பணி, நொய்யல் ஆற்றில் சுத்தம் செய்யும் பணி ஆகியன மேற்கொள்ளப்பட்டன.
நேற்று காலை பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது.
மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் மாநகர போலீஸ் அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் பகுதி; மேடை நிகழ்ச்சிகள்; வி.ஐ.பி..,க்கள் வந்து செல்லும் பாதை; கலை நிகழ்ச்சியினருக்கான ஏற்பாடு, பொதுமக்கள் வாகன பார்க்கிங், வந்து செல்லும் வழி, குடிநீர், கழிப்பிடம், அவசர உதவிக்கான மருத்துவ மையம், தீயணைப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

