/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
60,000 டன் 'மிக்சர் சால்ட்' அகற்ற ஆய்வு
/
60,000 டன் 'மிக்சர் சால்ட்' அகற்ற ஆய்வு
ADDED : ஜன 11, 2025 10:36 PM
திருப்பூர்:திருப்பூர் சாய ஆலைகள், 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்கின்றன. சுத்திகரிப்பின் இறுதியாக கிடைக்கும், 'ஸ்லட்ஜ்' எனப்படும் திடக்கழிவு மற்றும் 'மிக்சர் சால்ட்' எனப்படும் கலவை உப்பு ஆகியவற்றை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்களில் சேகரமாகும், 'ஸ்லட்ஜ்' கழிவுகள், ஒரு டன், 7,000 ரூபாய் செலவில், லாரிகளில் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இருப்பினும், பாதுகாப்பான வழிமுறை கண்டறியப்படாமல், திருப்பூரில், 60,000 டன் மிக்சர் சால்ட் தேங்கியுள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் முருகசாமி கூறுகையில், ''டன் ஒன்றுக்கு, 7,000 ரூபாய் வரை செலவிட்டு, சிமென்ட் ஆலைகளுக்கு ஸ்லட்ஜ் அனுப்பப்படுகிறது. ஆனால், மிக்சர் சால்ட் அகற்ற சரியான வழிகாட்டுதல் இல்லை. தமிழக அரசு, இதுதொடர்பான ஆராய்ச்சிகளை துவக்கியுள்ளது.
''மாசுகட்டுப்பாட்டு வாரியம், மிக்சர் சால்ட்டை சுத்திகரிப்பு செய்து, கடலில் கலக்கும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. விரைவில் தீர்வு கிடைத்தால் மட்டுமே, திருப்பூர் சாயத் தொழில் பாதுகாப்பாக இயங்க முடியும்,'' என்றார்.

