/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோப்புகளை ஆக்கிரமித்த பார்த்தீனியம் கட்டுப்படுத்த திணறல்
/
தோப்புகளை ஆக்கிரமித்த பார்த்தீனியம் கட்டுப்படுத்த திணறல்
தோப்புகளை ஆக்கிரமித்த பார்த்தீனியம் கட்டுப்படுத்த திணறல்
தோப்புகளை ஆக்கிரமித்த பார்த்தீனியம் கட்டுப்படுத்த திணறல்
ADDED : டிச 23, 2024 10:05 PM

உடுமலை; 'தென்னந்தோப்பில், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், பார்த்தீனிய செடிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, தோட்டக்கலைத்துறையினர் உதவ வேண்டும்,' என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், பல ஆயிரம் ெஹக்டேரில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், ஊடுபயிர் மேற்கொள்ளப்படாத தென்னந்தோப்புகளில், பார்த்தீனியம் களைச்செடி பரவலால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, பருவமழை சீசன் மற்றும் பி.ஏ.பி., பாசன காலத்துக்கு பிறகு, இச்செடிகள், தென்னந்தோப்பு முழுவதும் பரவி வருகிறது.
இச்செடிகளை கட்டுப்படுத்த, அதிக வீரியம் மிகுந்த களைக்கொல்லிகளை, தென்னந்தோப்பில், தெளிக்கின்றனர். தொடர் பயன்பாட்டால், மண் வளமும் பாதிப்பிற்குள்ளாகிறது.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இக்களைச்செடியை கட்டுப்படுத்த வேளாண்துறை உதவ வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பார்த்தீனிய செடிகள், அனைத்து பகுதிகளிலும், செழித்து வளர்ந்துள்ளன. இச்செடிகளை, அழிக்க ஒவ்வொரு சீசனிலும், மருந்து தெளித்தல் உட்பட பணிகளுக்காக, பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில், உயிரியல் முறையில், இக்களைச்செடியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.
எனவே, தோட்டக்கலைத்துறையினர் களைக்கொல்லி இல்லாமல், பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.