/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியத்தில் பசுந்தாள் உரம் விதை: மண் புழு உரப்படுகையும் வினியோகம்
/
மானியத்தில் பசுந்தாள் உரம் விதை: மண் புழு உரப்படுகையும் வினியோகம்
மானியத்தில் பசுந்தாள் உரம் விதை: மண் புழு உரப்படுகையும் வினியோகம்
மானியத்தில் பசுந்தாள் உரம் விதை: மண் புழு உரப்படுகையும் வினியோகம்
ADDED : அக் 16, 2025 08:38 PM

உடுமலை: உடுமலை வட்டாரத்தில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உரம் மற்றும் மண்புழு உரப்படுகை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
உடுமலை வட்டாரத்தில், முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தக்கை பூடு விதை தேவையான அளவு இருப்பு உள்ளது. ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ வீதம், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தக்கை பூடு விதைக்கும் போது, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை, தலா அரை லிட்டர் வீதம் வாங்கி விதையுடன் கலந்து விதைக்க வேண்டும்.
பின்னர், பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்துவிட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதன் வாயிலாக, பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து, பயிர் செழிப்புடன் வளர்வதோடு, மகசூலும் அதிகரிக்கும்.
தக்கை பூடு மடக்கி உழுவதால், இயற்கை உரமாக மாறி, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து கிடைக்கிறது. மேலும், மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கிறது.
சாம்பல் சத்தினை செடிகள் எடுக்கும் விதமாக கொடுக்கிறது. மேலும், கரிமச்சத்து அதிகரிப்பதால் மண்ணில் நீர் பிடிப்பு திறன் அதிகரித்து, பயிர்களின் விளைச்சல் அதிகமாகி உரச்செலவை குறைக்க முடியும்.
எனவே, விவசாயிகள் தக்கை பூடு விதைகளை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலை வட்டாரத்திற்கு, 1,150 கிலோ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும்' திட்டத்தின் கீழ், விவசாயிகள் மண்புழு உரப்படுகை அமைக்க, 44 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சம் இரண்டு மண்புழு உரப்படுகை வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு, பதிவு செய்து கொள்ளலாம். உதவி வேளாண்மை அலுவலர்கள், பசுந்தாள் விதைப்பினையும் மண்புழு உரப்படுகையினையும், 'ஜியோ டேக்கிங்' செய்ய வேண்டியுள்ளதால், உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.