/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய நிலக்கடலை விலை வெளிச்சந்தையை விட அதிகம்; விவசாயிகள் அதிர்ச்சி
/
மானிய நிலக்கடலை விலை வெளிச்சந்தையை விட அதிகம்; விவசாயிகள் அதிர்ச்சி
மானிய நிலக்கடலை விலை வெளிச்சந்தையை விட அதிகம்; விவசாயிகள் அதிர்ச்சி
மானிய நிலக்கடலை விலை வெளிச்சந்தையை விட அதிகம்; விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 17, 2024 05:59 AM

திருப்பூர்; வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் விதை நிலக்கடலையின் விலை, வெளிச்சந்தையை விட அதிகமாக உள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வேளாண்மை துறை சார்பில் விதைப்பு பயன்பாட்டுக்காக ஒரு கிலோ நிலக்கடலை, 123 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு, 40 ரூபாய் அரசின் மானியம் போக, 83 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் நிலக்கடலை விதைப்பு நடைபெற்று வரும் இத்தருணத்தில், மானிய நிலக்கடலை விலையால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க வேளாண் தொழில் முனைவோர் பிரிவு மாநில செயலாளர் வேலுசாமி கூறியதாவது:
வேளாண் துறையில், விதை நிலக்கடலை விற்பனையில் பெரும் முறைகேடு நடக்கிறது. வெளிச்சந்தையை விட மானிய விலை மிக அதிகம். மழை, வெயில் என எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இயற்கை பேரிடரால் நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் பாதிக்கப்பட்டால், ஒட்டு மொத்த பிர்காவில் உள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டால் தான், இழப்பீடு கிடைக்கும் என்கின்றனர்.
மாவட்ட வாரியாக விவசாயிகள் மத்தியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருகிறோம். முடிவில், விவசாயிகள் சந்திக்கும் சிரமங்கள், திட்டங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.