தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்


ADDED : ஆக 15, 2025 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலை பகுதிகளில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான சான்றுபெற்ற விதைகள் மற்றும் இடுபொருட்கள் உடுமலை வேளாண்துறை கிடங்குகளில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இங்கு, சோளம், கம்பு, உளுந்து, வீரிய ஒட்டு மக்காச்சோளம் ஆகிய சான்று பெற்ற விதை ரகங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளது. அதே போல், பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்து உரங்கள், டீ விரிடி, சூடோமோனஸ், திரவ ஜிங்க்சல்பேட் உரம், ஜிப்சம்

திரவ ரைசோபியம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள் உடுமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us