/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை
/
தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை
ADDED : ஜன 22, 2025 07:49 PM

உடுமலை; உடுமலை வட்டாரத்தில், விவசாயிகள் தைப்பட்ட சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
உடுமலை வட்டாரத்தில், தைப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான, உளுந்து வம்பன் - 8 ரகம், சோளம் கோ - 32 ஆகிய ரகத்தில் சான்று பெற்ற விதைகள் குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இந்த விதைகளை, விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.
மேலும், விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்டச்சத்து உரங்களும் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.