மானியத்தில் சோலார் மின் உற்பத்தி மின்வாரியம் விழிப்புணர்வு பிரசாரம்
மானியத்தில் சோலார் மின் உற்பத்தி மின்வாரியம் விழிப்புணர்வு பிரசாரம்
UPDATED : அக் 16, 2026 03:56 PM
ADDED : அக் 16, 2026 03:54 PM

உடுமலை: உடுமலை மின் பகிர்மான வட்டம் மற்றும் கோட்டம் சார்பில், சூரிய மின்சக்தியின் பயன்பாடு மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்து போடிபட்டியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதன் அவசியம், பதிவு நடைமுறைகள், வங்கிக்கடன் பெற வழிமுறைகள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், சோலார் மின்சாரம் தொடர்பாக மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் எழுப்பிய சந்தேகங்களுக்கும், மின்வாரியத்தினர் விளக்கமளித்தனர்.
அதன்படி, 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு மத்திய அரசு மானியம் ரூ.30,000, தமிழக அரசு ரூ.5,000 என மொத்தம், ரூ.35,000 வழங்கப்படும்.
2 கி.வா., திறனுக்கு மத்திய அரசு மானியம் ரூ.60,000, தமிழக அரசு ரூ.10,000 என மொத்தம், ரூ.70,000; 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகளுக்கு, மத்திய அரசு மானியம், ரூ.78,000, தமிழக அரசு மானியம், ரூ.22,000 என மொத்தம், ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம்.
சூரிய மின்சக்தியை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரச் செலவைக் குறைக்க முடியும்; அரசின் மானியத் திட்டங்களைப்பயன்படுத்தி சோலார் அமைப்புகளை நிறுவும் நடைமுறைகளையும் தெரிவித்து, மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினரிடையே மின்வாரிய பணியாளர்கள், அலுவலர்கள் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
