/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலவை உப்பு சுத்திகரிக்க மானியம்: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
/
கலவை உப்பு சுத்திகரிக்க மானியம்: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
கலவை உப்பு சுத்திகரிக்க மானியம்: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
கலவை உப்பு சுத்திகரிக்க மானியம்: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 09, 2025 11:41 PM
திருப்பூர்: சுத்திகரிப்பு நிலையங்களில் தேங்கியுள்ள, 'மிக்சர் சால்ட்' எனப்படும் கலவை உப்பை சுத்திகரிக்கும் 'பைலட் பிளான்ட்' அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்க வேண்டுமென, திருப்பூர் சாய ஆலைகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
திருப்பூரில் இயங்கும், 350 சாய ஆலைகள், தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்ய, 18 இடங்களில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், 2010ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
சாயக்கழிவுநீரில் இருந்து, 90 சதவீத தண்ணீர், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற தண்ணீராக பிரித்து எடுக்கப்படுகிறது. மீதியுள்ள 10 சதவீத கழிவில், 80 சதவீதம், 'பிரெய்ன் சொல்யூஷன்' எனப்படும், அடர் உப்பு திரவமாக பிரித்து மீண்டும் சாயமிட பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பிறகு எஞ்சியுள்ள, 20 சதவீத கழிவில் இருந்து, சாயமிட தேவையான உப்பு வகைகள், தனித்தனியே பிரித்து எடுக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.
1.2 லட்சம் டன் தேக்கம் இறுதியாக எஞ்சும், 2 சதவீத திடக்கழிவு, 'மிக்சர் சால்ட்' எனப்படுகிறது; இது, பல்வேறு மூலக்கூறுகள் கலந்த கலவையாக இருப்பதால், பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல; இப்படி, சேர்க்கப்பட்ட 'மிக்சர் சால்ட்' மட்டும், 1.20 லட்சம் டன் அளவுக்கு திருப்பூரில் தேங்கியுள்ளது.
தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதியுடன், ஒரு நிறுவனம் மட்டும், ஒரு டன்னுக்கு, 7,200 ரூபாய் கட்டணம் பெற்று, 'மிக்சர் சால்ட்' வாங்கி சென்று சுத்திகரிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தேங்கியுள்ள 'மிக்சர் சால்ட்' காலியாக பல ஆண்டுகளாகும்; அதற்காக, 86 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும்.
கலவை உப்பை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்தும் உப்பு மற்றும் கெமிக்கலை பிரித்து எடுக்க முயற்சிக்கலாம். அத்தகைய ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதால், 'பைலட் பிளான்ட்' அமைத்து, திருப்பூரிலேயே சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்க, மத்திய அரசு மானியம் வழங்கி உதவ வேண்டும் என்கின்றனர் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள்.
திருப்பூரில் 'பைலட் பிளான்ட்' அமைத்து, கலவை உப்பு பிரச்னைக்கு தீர்வு கண்டறிய முயற்சிக்க வேண்டும்; அதற்கான வாய்ப்பு இருந்தால், மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
உப்பில் இருந்து, குளோரைடு, சல்பேட் பிரிக்கப்படுகிறது. 'மிக்சர் சால்ட்'டில் இருந்து, 'ைஹட்ரோகுளோரிக் ஆசிட்' (எச்.சி.எல்.,), 'பெராக்சைடு', 'காஸ்டிக் சோடா',' ைஹப்போ குளோரைடு' ஆகிய நான்கு பொருட்களை பிரித்து எடுக்கலாம் என கண்டறியப்பட்டது. ஏற்கனவே, மண்ணரையில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது.
நிதியுதவி கிடைக்காமல் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கலவை உப்பு கழிவில் இருந்து, மீண்டும் பயன்படுத்தும் நான்கு வகையான பொருட்கள் பிரித்து எடுக்கலாம்.
தண்ணீரில் உப்பை கொட்டி, பகுத்து பிரிக்கும் தொழில்நுட்பத்தில் (ைஹட்ரலைஸ்) பிசியோ கெமிக்கல் முறையில் தான், 'சோடியம் ைஹட்ராக்சைடு, சோடியம் ைஹப்போ குளோரைடு (பிளீச்சிங் லிக்கர்), மீதியுள்ள, ' ைஹட்ரோ குளோரிக் ஆசிட்' தனியே நின்றுவிடும். இவற்றை, விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, உப்பு சுத்திகரிப்பு மூலமாக, பெறலாம்; தேங்கியுள்ள கழிவும் காலியாகும்.
'பைலட் பிளான்ட்' அமைக்க, இரண்டு கோடி வரை செலவாகும்; மத்திய அரசு, அதற்கு மானியம் வழங்கி ஊக்குவித்தால், திருப்பூரின் மிகப்பெரிய சவாலுக்கு தீர்வு காண முடியும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
- மாதேஸ்வரன், பொருளாளர்,சாய ஆலை உரிமையாளர் சங்கம்.

