/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகள்; நெடுஞ்சாலையில் அவலம்
/
தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகள்; நெடுஞ்சாலையில் அவலம்
தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகள்; நெடுஞ்சாலையில் அவலம்
தரமற்ற முறையில் சீரமைப்பு பணிகள்; நெடுஞ்சாலையில் அவலம்
ADDED : அக் 29, 2024 08:58 PM
உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற முறையில், 'பேட்ஜ் ஓர்க்' பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம், உடுமலை வழியாக கோலார்பட்டி வரை பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கென உடுமலை உட்கோட்ட அலுவலகமும், உதவி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், உட்கோட்டத்துக்கு அலுவலர்கள் நியமிக்கப்படாமல், தற்காலிகமாக செயல்பட்டு வந்த அலுவலகமும் மூடப்பட்டது.
இந்நிலையில், தற்போது, திண்டுக்கல் கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொறுப்பில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் உடுமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பல இடங்களில் பரிதாப நிலைக்கு மாறியது.
குழிகள் இருப்பதே தெரியாத அளவுக்கு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானர்கள். தேசிய நெடுஞ்சாலை, பல்லாங்குழியாக மாறியது.
கடந்த சில நாட்களாக, தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ரோடு சேதமடைந்த பகுதிகளில், தரமற்ற முறையில் 'பேட்ஜ் ஓர்க்' பணிகள் நடந்து வருகிறது.
தார்க்கலவை முறையாக அமைக்காததால், 'பேட்ஜ் ஓர்க்' அமைத்த ஜல்லிக்கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கிறது. இவ்வாறு, நகரின் பல்வேறு இடங்களில், சீரமைப்பு பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
மேலும், பெரிய குழிகளை முறையாக சீரமைக்காததால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. நீண்ட காலமாக தேசிய நெடுஞ்சாலை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்து போராடவும் உடுமலை பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.