/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமில்லாத தார் ரோடு பணி; மக்கள் எதிர்ப்பால் சீரமைப்பு
/
தரமில்லாத தார் ரோடு பணி; மக்கள் எதிர்ப்பால் சீரமைப்பு
தரமில்லாத தார் ரோடு பணி; மக்கள் எதிர்ப்பால் சீரமைப்பு
தரமில்லாத தார் ரோடு பணி; மக்கள் எதிர்ப்பால் சீரமைப்பு
ADDED : ஜூலை 10, 2025 11:21 PM

பல்லடம்; பல்லடத்தில், தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்புச் சாலையை அதிகளவில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும், பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகின்றன.
நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த இந்த ரோடு மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. பல்லடம் நகராட்சி நிர்வாகம் மூலம், 45 லட்சம் ரூபாய் செலவில் ரோடு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 8ம் தேதி இரவு, ரோடு போடும் பணி துவங்கிய நிலையில், அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட பணியால், ரோட்டின் சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்பட்டது. பொதுமக்கள் பலர் தெரிவித்த நிலையில், சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், துடப்பத்தை பயன்படுத்தி, ரோட்டில் பரவிக் கிடந்த ஜல்லிக்கற்களை ஒழுங்கு படுத்தினர்.
இது குறித்து அறிந்த ஒப்பந்ததாரர், ஊழியர்கள், உடனடியாக ரோட்டை சீரமைக்கும் பணியில் களம் இறங்கினர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அரைகுறையாக போடப்பட்ட ரோட்டுக்கு, சில மணி நேரங்களிலேயே தீர்வு கிடைத்தது.