sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வர்த்தகம் சாத்தியம்: ஏற்றுமதியாளரின் வெற்றிகரமான செயல்பாடு

/

வர்த்தகம் சாத்தியம்: ஏற்றுமதியாளரின் வெற்றிகரமான செயல்பாடு

வர்த்தகம் சாத்தியம்: ஏற்றுமதியாளரின் வெற்றிகரமான செயல்பாடு

வர்த்தகம் சாத்தியம்: ஏற்றுமதியாளரின் வெற்றிகரமான செயல்பாடு


UPDATED : செப் 29, 2024 04:26 AM

ADDED : செப் 29, 2024 02:01 AM

Google News

UPDATED : செப் 29, 2024 04:26 AM ADDED : செப் 29, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

''சுங்க வரித்துறை, ஜி.எஸ்.டி., மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவின், நேரடி உதவி இருந்தால் மட்டுமே, ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக செயல்பட முடியும்,'' என, ஏ.இ.பி.சி., தென்பிராந்திய தலைவர் சக்திவேல் பேசினார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), அமெரிக்காவின் 'ஸ்டென்' நிறுவனம் சார்பில், ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான வசதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.

'ஸ்டென்' நிறுவன அதிகாரி ஆனி, வரவேற்று, அந்நிறுவனம் ஏற்றுமதியாளர்களுக்கும், ஏற்றுமதி வர்த்தகர்களுக்கும் வழங்கி வரும் நிதி சேவை தொடர்பாக பேசினார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து, ஏ.இ.பி.சி., தென்பிராந்திய தலைவர் சக்திவேல் பேசியதாவது:

கடந்தாண்டு மழை வெள்ள பாதிப்பால், துாத்துக்குடி சரக்கு முனையத்தில் இருந்த சரக்குகள் பாதிக்கப்பட்டன. அவற்றுக்கு, உரிய இழப்பீடு பெற, சுங்கவரித்துறை விரைவாக உதவி செய்ததை, ஏற்றுமதியாளர்கள் வரவேற்றனர். சுங்க வரித்துறை, ஜி.எஸ்.டி., மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவின், நேரடி உதவி இருந்தால் மட்டுமே, ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக செயல்பட முடியும்.

ஏற்றுமதியான சரக்குகள் விவரத்தை, கப்பலிடப்பட்ட 'பில்' கொடுத்து, வெளிநாட்டு வர்த்தக பிரிவுக்கு தகவல் அளித்து வந்தோம். தற்போது, ஆன்லைன் சேவையாக மாறிவிட்டதால், கப்பலிடப்பட்ட 'பில்' விவரம், வெளிநாட்டு வர்த்தக பிரிவு அலுவலகத்துக்கு, சரியான இடைவெளியில், 'அப்டேட்'ஆவதில்லை. இ.டி.பி.எம்.எஸ்., இணையதளத்தில், ஏற்றுமதி 'பில்' விவரம் பார்வையிட முடிவதில்லை. சுங்கவரித்துறையில், நீண்டகாலமாக உள்ள நிலுவையை, விரைவாக விடுவிக்க வேண்டும். இ.டி.பி.எஸ்., தகவல் பரிமாற்றத்தையும், சீர்படுத்த வேண்டும்.

இவ்வாறு, சக்திவேல் பேசினார்.

ஜி.எஸ்.டி., (மாநில வரிகள்) உதவி கமிஷனர் ஷோபனா, 'ஸ்டென்' நிறுவன முதன்மை விற்பனை மேலாளர் அபிஷேக் தோரத், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் இளங்கோவன், ஏ.இ.பி.சி., துணை தலைவர் ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us