UPDATED : ஜூலை 26, 2026 11:21 PM
ADDED : ஜூலை 26, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
பல்லடம்:பல்லடம் போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள காளிங்கநர்த்தன வேணுகோபால கிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில், சீமை கருவேல மரங்கள் நிறைந்த புதரில் மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீ வேகமாக பரவி, அருகில் இருந்த குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பல்லடம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், சீமை கருவேல மரங்களை அகற்றி, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
