/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பில் நோய்த்தாக்குதல்; அதிகாரிகள் குழு ஆய்வு! 'தினமலர்' செய்தி எதிரொலி
/
கரும்பில் நோய்த்தாக்குதல்; அதிகாரிகள் குழு ஆய்வு! 'தினமலர்' செய்தி எதிரொலி
கரும்பில் நோய்த்தாக்குதல்; அதிகாரிகள் குழு ஆய்வு! 'தினமலர்' செய்தி எதிரொலி
கரும்பில் நோய்த்தாக்குதல்; அதிகாரிகள் குழு ஆய்வு! 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 26, 2025 09:05 PM

உடுமலை; உடுமலை அருகே, கரும்பு சாகுபடியில் நோய்த்தாக்குதல் குறித்த 'தினமலர்' செய்தி எதிரொலியாக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஜோதிவேல் தலைமையிலான குழுவினர் விளைநிலங்களில் ஆய்வு செய்தனர்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், பரவலாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுக்குளம் பாசனத்துக்குட்பட்ட வடபூதனம் உள்ளிட்ட பகுதிகளில், வளர்ச்சி தருணத்தில் உள்ள கரும்பு பயிர்களில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு பரவி வருகிறது.
கரும்பு பயிரின் இலைகள் முழுமையாக மஞ்சள் நிறத்துக்கு மாறி, வளர்ச்சி பாதிக்கிறது. நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரியாததால், பயிர்கள் முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று காலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஜோதிவேல் தலைமையில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி, சர்க்கரை ஆலை தொழிலாளர் நல அலுவலர் பிச்சைகனி, கரும்பு உதவியாளர் மாணிக்கராஜ், உதவி வேளாண் அலுவலர் வைரமுத்து, வி.ஏ.ஓ., சாவித்திரி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அக்குழுவினர் கூறியதாவது: 'தினமலர்' நாளிதழ் செய்தி அடிப்படையில், சென்னை சர்க்கரை துறை இயக்குநர், விளைநிலங்களில் நேரடி ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். அதன்படி, ஒட்டுக்குளம் பகுதியில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதி விளைநிலங்களிலுள்ள கரும்பு பயிர்களில், இரும்பு சத்து குறைபாடு மற்றும் அதிக தண்ணீர் தேங்கியதால், பயிர்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறியது தெரியவந்தது. விவசாயிகள் பின்பற்ற வேண்டிய உர மேலாண்மை குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கரும்பு விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்காமல், வடிகால் வசதி ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. பயிர்களில் வேறு நோய் தொற்றுகள் தென்படவில்லை. இவ்வாறு, தெரிவித்தனர்.