/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பு லாரி 'பல்டி' பெண்கள் படுகாயம்
/
கரும்பு லாரி 'பல்டி' பெண்கள் படுகாயம்
ADDED : மார் 18, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில்  இருந்து கரும்பு ஏற்றிய லாரி, சத்தியமங்கலம் தனியார்  சர்க்கரை ஆலைக்கு நேற்று மதியம் வந்தது. அந்தியூரை சேர்ந்த  மணிகண்டன், 45, ஓட்டி வந்தார்.
அணைக்கரை பகுதியில் வந்தபோது, ஒரு திருப்பத்தில் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ராஜாமணி, மாதம்மா, பூங்கொடி, ராணி, ரங்கி ஆகியோரும் லாரிக்குள் அமர்ந்து பயணித்தனர். விபத்தில் சிக்கியதால் டிரைவர் உள்பட ஆறு பேரும் இடிபாடுகளில் சிக்கி அலறினர். இதில் ராஜாமணி, ௩௫, படுகாயம் அடைந்தார். மற்றவர்களை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டனர். சத்தி அரசு மருத்துவமனையில் ராஜாமணி சேர்க்கப்பட்டார்.

