/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சிப்பாதையில் ஏற்றுமதி குடியரசு தினவிழாவில் சூளுரை
/
வளர்ச்சிப்பாதையில் ஏற்றுமதி குடியரசு தினவிழாவில் சூளுரை
வளர்ச்சிப்பாதையில் ஏற்றுமதி குடியரசு தினவிழாவில் சூளுரை
வளர்ச்சிப்பாதையில் ஏற்றுமதி குடியரசு தினவிழாவில் சூளுரை
ADDED : ஜன 26, 2024 11:54 PM

திருப்பூர்: நாட்டின், 75வது குடியரசு தினவிழா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, திருநாவுக்கரசு, ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கத்தின் மூத்த உறுப்பினர் பிரேம் துரைசாமி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''திருப்பூரின் வளர்ச்சிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது. நிறுவன தலைவர் சக்திவேல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அடங்கிய ஆற்றல் மிகுந்த குழுவினர் மற்றும் சங்கத்தின் உழைப்பால், பல்லடம் தாலுகாவின் ஒரு கிராமமாக இருந்த திருப்பூர், இன்று நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது,'' என்றார்.
ஏற்றுமதி வர்த்தகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவோம் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சூளுரை ஏற்றனர்.

