/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா தலங்களில் கோடை விழா; சுற்றுலாத் துறையினர் ஆலோசனை
/
சுற்றுலா தலங்களில் கோடை விழா; சுற்றுலாத் துறையினர் ஆலோசனை
சுற்றுலா தலங்களில் கோடை விழா; சுற்றுலாத் துறையினர் ஆலோசனை
சுற்றுலா தலங்களில் கோடை விழா; சுற்றுலாத் துறையினர் ஆலோசனை
ADDED : ஜன 04, 2025 12:37 AM
திருப்பூரில்; திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பரபரப்பான தொழில் நகரமான திருப்பூர் நகரில், ஆண்டிபாளையம் குளம், நஞ்சராயன் பறவைகள் சரணலாயம் உள்ளிட்டவை சுற்றுலா முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரியும் துவங்கியுள்ளது.
உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள, திருமூர்த்திமலை, அமராவதி அணை ஆகியவை சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளன. விடுமுறை நாட்களில் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், திருமூர்த்திமலையில், சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியில்லை என்ற குறையுள்ளது; படகு சவாரியும் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்கும் திட்டமும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புதர்மண்டிக் கிடக்கும் அமராவதி அணை பூங்காவை, சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர். பஞ்சலிங்க அருவி பகுதியில் போதிய கழிப்பிட வசதி இல்லை என்ற ஆதங்கமும் உள்ளது. சுற்றுலா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழல், இயற்கையை பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வாகவும் தான் இருக்கிறது. சுற்றுலா தளங்களில் உள்ள கடைகள், புதிதாக உருவாகும் கடைகளால் பலரது வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதுடன், பொங்கல் விழா, கோடை விழா போன்வற்றை சுற்றுலா தலங்களில் நடத்துவதன் வாயிலாக, சுற்றுலாவின் முக்கியத்துவம், சுற்றுலாவுக்கு துணை நிற்கும், இயற்கை அன்னை வழங்கிய நீர்நிலை, வனம் உள்ளிட்டவற்றின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற யோசனை எழுந்துள்ளது.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமாரிடம் கேட்ட போது, ''சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோடை விழா நடத்துவது தொடர்பாக, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

