/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
/
மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
ADDED : மே 06, 2025 11:42 PM
உடுமலை: உடுமலை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கோடைகால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம், ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் எட்டு நாட்கள் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஜூலியா முகாமை துவக்கி வைத்தார்.
ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பயிற்சி முகாமில், பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ், மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி அளித்தார்.
திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மோகன்குமார், விளையாட்டின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.
செங்குந்தர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் மாரிமுத்து, பயிற்சி பெறுவதன் அவசியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.