/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தர்பூசணி வரத்து அதிகரிப்பு; முன்னதாகவே துவங்கிய கோடை
/
தர்பூசணி வரத்து அதிகரிப்பு; முன்னதாகவே துவங்கிய கோடை
தர்பூசணி வரத்து அதிகரிப்பு; முன்னதாகவே துவங்கிய கோடை
தர்பூசணி வரத்து அதிகரிப்பு; முன்னதாகவே துவங்கிய கோடை
ADDED : பிப் 20, 2025 11:27 PM

உடுமலை; முன்னதாகவே கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், உடுமலையில் தர்ப்பூசணி விற்பனை களைகட்டியுள்ளது.
உடுமலை பகுதிகளில் கோடை காலம் முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில், தர்ப்பூசணி வரத்தும் அதிகரித்துள்ளது.
திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட, தர்ப்பூசணி பழங்கள் உடுமலைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
உடுமலை தளி ரோடு, பழநி ரோடு, தாராபுரம் ரோடு என பிரதான ரோடுகளிலும், காய்கறி கடைகளிலும் தர்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தர்ப்பூசணி, தரத்திற்கு ஏற்ப, 20 முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.