/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடைக்கால பயிற்சி முகாம்; திறமையை மெருகேற்றலாம்
/
கோடைக்கால பயிற்சி முகாம்; திறமையை மெருகேற்றலாம்
ADDED : ஏப் 16, 2025 10:58 PM
திருப்பூர்; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ள கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: திருப்பூர் மாவட்ட விளையாட்டரங்கில் வரும், 25 முதல், மே, 15 வரை 21 நாட்கள், கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது; 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதோரும் பங்கேற்கலாம்.---- தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, பேட்மின்டன், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுகள், அவற்றில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர், வரும், 24ம் தேதி, மாலை 6:00 மணி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் திறமையானவர் கண்டறியப்பட்டு, அவர்கள் அடுத்த நிலைக்கான போட்டிக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு, 2244899, 86109 00142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.