/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை விடுமுறை துவக்கம் சிறப்பு பஸ்களில் கூட்டம்
/
கோடை விடுமுறை துவக்கம் சிறப்பு பஸ்களில் கூட்டம்
ADDED : ஏப் 28, 2025 06:09 AM

திருப்பூர் : பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பூரில், நேற்று, சிறப்பு பஸ்களில் கூட்டம் அதிகரித்தது.
அனைத்து வகுப்பு களுக்கும் இறுதித்தேர்வு முடிந்து, கடந்த 24ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி, பழநிக்கு அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. பஸ் வந்தவுடன், ரேக்கில் வந்து பஸ் நிற்கும் முன்பே ஒருவரையொருவர் முண்டியடித்து பஸ்சுக்குள் புகுந்து இடம் பிடிக்க முட்டிமோதினர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ் இயக்கம் தாமதமானதால், அடுத்தடுத்து பொள்ளாச்சிக்கு பஸ் வரவில்லை. வந்த ஒரு பஸ்சில், 120க்கும் அதிகமான பயணிகள் ஏறிக்கொண்டனர். பஸ் புறப்படாமல் ரேக்குக்கு திரும்பியதால், அங்கிருந்த பயணிகள் - நடத்துனரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
டிக்கெட் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் 'பஸ்சை உரிய நேரத்துக்கு தானே எடுக்க முடியும்' எனக்கூறி பயணிகளை சமாதானம் செய்தனர். அதற்கும் பொள்ளாச்சிக்கு மற்றொரு பஸ் வந்து விட பாதி பயணிகள அதில் ஏறிக்கொண்டனர். வாரவிடுமுறை நாட்களில் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ் இயக்கும் போக்குவரத்து கழக அதிகாரிகள், பண்டிகை, விசேஷ தினங்களை முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப வழிபாட்டுதலங்களுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.