sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கதிர் அரிவாளுக்கு சூரியனே துணை

/

கதிர் அரிவாளுக்கு சூரியனே துணை

கதிர் அரிவாளுக்கு சூரியனே துணை

கதிர் அரிவாளுக்கு சூரியனே துணை


ADDED : மார் 25, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு சுப்பராயனின் நாவன்மை பிடிக்கும். சட்டசபையில், கூர்மையாக இவரது குரல் ஒலித்தது; ஆனால், 'நாடாளுமன்றத்தில், எதிரொலித்ததா?' என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.

தற்போது, திருப்பூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மீண்டும் சுப்பராயன், களம் காண்கிறார். தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் பலம்தான், இம்முறை சுப்பராயனை உயர்த்திவிட வேண்டும்.

எதிர்பார்த்தது போலவே, சுப்பராயனுக்கு 'சீட்' கிடைத்தது. கட்சியில் 'சீனியர்'. ஆனால், அவருக்காக கட்சியின் விதிகள் தளர்ந்தன. இருமுறை எம்.எல்.ஏ., - இருமுறை எம்.பி.,யாக பதவி வகித்திருக்கிறார். இந்த முறை சத்தமின்றி, கட்சிக்குள், சுப்பராயனுக்குப் பதிலாக மாற்று வேட்பாளர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், இத்தேர்தலில் சுப்பராயனின் பெயர் பிரபலமும் வெற்றிக்குத் தேவைப்படும் என்று முடிவானது. மாநில செயலாளர் முத்தரசன் மட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலினின் ஆதரவும் சுப்பராயன் வசம் இருந்தது.

எதிர்த்துக் களம் காணும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள், ''வெற்றிக்குப் பிறகு தொகுதிக்குள் எட்டிப்பார்க்காதவர்'' என்று சுப்பராயன் மீது விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ''வழக்கமாக இப்படியொரு விமர்சனத்தைத் தான் எப்போதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் முன்வைப்பார்கள்; சுப்பராயனின் சாதனைகள் வாக்காளர்களுக்குத் தெரியும். கடந்த முறை அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைந்தும்கூட வெற்றிபெற்றவர் சுப்பராயன்தான்; இந்த முறை அதைவிட வெற்றி எளிதாகும்'' என்று பதிலடி கொடுக்க, கூட்டணியினருடன் இணைந்து இந்திய கம்யூ.,வினரும் தயாராகின்றனர்.

-----

அருணாசலம்

-----------

இலை 'வசீகரம்' இனி தொடருமா?

''நல்லாவே பேசுறாரே நம்ம வேட்பாளர்'' என்று திருப்பூர் அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலத்தின் மீது கட்சியினர் பாசமழை பொழிகிறார்கள். சீனியர்கள் ஒதுங்கிக்கொண்டாலும்கூட, ஆபத்பாந்தவனாக அ.தி.மு.க.,வைக் கரையேற்ற வந்திருக்கிறார் என்ற பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. பொதுச்செயலாளர் பழனிசாமியின் உறவினர் என்பது இவருக்கு கூடுதல் அடையாளம்.

கடந்த முறை முன்னாள் அமைச்சர் ஆனந்தன் களம் கண்டார். எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்றெண்ணி, விடாப்பிடியாக 'சீட்' பெற்றவர், தோல்வியைத் தழுவினார். தற்போதைய வேட்பாளர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம், கட்சிப் பொறுப்பை மட்டுமின்றி, பெருந்துறை நகராட்சி வார்டு கவுன்சிலராக இருந்த அனுபவத்தையும், இத்தேர்தலில் துணைக்கொள்வார். செங்கோட்டையன், வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன், சிவசாமி, குணசேகரன், விஜயகுமார் என 'சீனியர்கள்' துணையைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.

இருமுறை அ.தி.மு.க., வென்ற தொகுதி என்றபோதும், இந்த முறை, திருப்பூரில் போட்டியிட சீனியர்களிடையே தயக்கம் நிலவியது. இது எதிர்மறை என்றாலும், புதுமுகத்தைக் களமிறக்குவதற்கு உதவிகரமாக அமைந்ததை நேர்மறை என்று கட்சியினர் கருதுகின்றனர்.

வேட்பாளர் ஈரோடா, திருப்பூரா என்ற கேள்வி, அடிக்கடி எழுவதுண்டு. லோக்சபா தொகுதி திருப்பூர் என்றாலும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நான்கு சட்டசபை தொகுதிகள் திருப்பூர் லோக்சபா தொகுதிக்குள்தான் இடம்பெறுகின்றன. இது, அ.தி.மு.க., வேட்பாளருக்கான பலம்தானே தவிர, பலவீனம் அல்ல; முன்பு வென்ற சத்தியபாமா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் என்கின்றனர், கட்சியினர்.

திருப்பூர் தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு என வாக்கு வங்கி உண்டு. லோக்சபா தேர்தலில் ஒருமுறை தி.மு.க.,வைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை, தே.மு.தி.க., பெற்றிருந்தது. இதனால், தே.மு.தி.க.,வின் பலமும் கைகொடுக்கும் என்பது அ.தி.மு.க.,வினரின் நம்பிக்கை.

-------------

முருகானந்தம்

-----------

தாமரை மலரும் தளராத நம்பிக்கை

கட்சியின் விசுவாசி மற்றும் உழைப்பாளி, திருப்பூர் லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளராகியிருக்கிறார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், இதற்குத் தகுதி படைத்தவர்தான். பல்லடத்தில் நடந்த பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், முருகானந்தத்தின் உழைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. கட்சியில் பிரபலமானவர். பல பொறுப்புகளை வகித்தவர். வாக்காளர்கள் மனசையும் இவர் தொட வேண்டும்.

வேட்பாளர் அறிவிப்பு சற்று தாமதமானாலும், வாக்காளர்களைச் சந்திக்க முதலிலேயே களமிறங்கியிருக்கிறார். பிரசாரத்திற்காக, நஞ்சப்பா பள்ளி மைதானத்தை எட்டிப் பார்க்காத வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள். இதே பாணியில், அங்கிருந்தே அதிகாலை நேரத்தை பிரசாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டார். அங்கு நடைபயிற்சிக்கு வருபவர்களில் பலர் தொழில்துறையினர். அவர்களிடம் பழகினால், தொகுதியின் நாடித்துடிப்பை உணர முடியும்; அதற்காகவே அங்கு வந்தார்; நாடித்துடிப்பை உணர்ந்தார்.

கடந்த முறை திருப்பூர் தொகுதியில், அ.ம.மு.க., வாங்கிய ஓட்டுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. அது, பா.ஜ.,வுக்கு கைகொடுக்கும். உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் தனித்து நின்று 2 வார்டுகளிலும், பல்லடம் நகராட்சியில் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் செல்வாக்கு, தொகுதிக்குள் எந்தளவு என்பதை உணர்த்துவதாக இத்தேர்தல் அமையும்.

''பிரசாரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினருக்கு இம்மியளவு கூட குறைவில்லாமல், பா.ஜ.,வின் பிரசாரம் அமையப்போகிறது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திரண்ட கூட்டம், வெற்றி பெறும் அளவு வாக்குகளை நாங்கள் வசீகரிப்போம் என்பதற்கான அடையாளமாக இருக்கும்'' என்று பா.ஜ.,வினர் மார் தட்டுகின்றனர்.

திருப்பூரில் பா.ஜ.,வின் பலத்தை வென்றுகாட்ட இதைவிட எங்கே வாய்ப்பு அமையப்போகிறது?

------

தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு சுப்பராயனின் நாவன்மை பிடிக்கும். சட்ட சபையில், கூர்மையாக இவரது குரல் ஒலித்தது; ஆனால், 'நாடாளுமன்றத்தில், எதிரொலித்ததா?' என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.

தற்போது, திருப்பூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மீண்டும் சுப்பராயன், களம் காண்கிறார். தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் பலம்தான், இம்முறை சுப்பராயனை உயர்த்திவிட வேண்டும்.

எதிர்பார்த்தது போலவே, சுப்பராயனுக்கு 'சீட்' கிடைத்தது. கட்சியில் 'சீனியர்'. ஆனால், அவருக்காக கட்சியின் விதிகள் தளர்ந்தன. இருமுறை எம்.எல்.ஏ., - இருமுறைஎம்.பி.,யாக பதவி வகித்திருக்கிறார். இந்த முறை சத்தமின்றி, கட்சிக்குள், சுப்பராயனுக்குப் பதிலாக மாற்று வேட்பாளர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.

ஆனால், இத்தேர்தலில் சுப்பராயனின் பெயர் பிரபலமும் வெற்றிக்குத் தேவைப்படும் என்று முடிவானது. மாநில செயலாளர் முத்தரசன் மட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலினின் ஆதரவும் சுப்பராயன் வசம் இருந்தது.

எதிர்த்துக் களம் காணும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள், ''வெற்றிக்குப் பிறகு தொகுதிக்குள் எட்டிப்பார்க்காதவர்'' என்று சுப்பராயன் மீது விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ''வழக்கமாக இப்படியொரு விமர்சனத்தைத் தான் எப்போதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் முன்வைப்பார்கள்; சுப்பராயனின் சாதனைகள் வாக்காளர்களுக்குத் தெரியும். கடந்த முறை அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைந்தும்கூட வெற்றிபெற்றவர் சுப்பராயன்தான்; இந்த முறை அதைவிடவெற்றி எளிதாகும்'' என்று பதிலடி கொடுக்க, கூட்டணியி னருடன் இணைந்து இந்திய கம்யூ., வினரும் தயாராகின்றனர்.






      Dinamalar
      Follow us