ADDED : ஜூலை 13, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது.
இதில் மொத்தம், 658 மூட்டைகளில் 32,245 கிலோ எடையிலான சூரிய காந்தி விதைகள் ஏலம் விடப்பட்டது. மொத்தம், 19.06 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் 47 பேரும், ஐந்து வியாபாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ 61.09 ரூபாய்; குறைந்த பட்சம் 52.89 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதில் சராசரியாக கிலோ 60.69 ரூபாய் என்ற அளவில் விலை இருந்தது.