/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்' ; வேளாண்துறை அறிவுரை
/
'டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்' ; வேளாண்துறை அறிவுரை
'டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்' ; வேளாண்துறை அறிவுரை
'டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்' ; வேளாண்துறை அறிவுரை
ADDED : ஆக 05, 2025 11:36 PM
உடுமலை; விவசாயிகள் டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் பயன்படுத்தலாம் வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியிருப்பதாவது:
நடப்பாண்டு, 391 ஏக்கரில் சோளம்; 632 ஏக்கரில் பயறு வகை; 8,257 ஏக்கரில் எண்ணெய் வித்து; 1.70 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள், போதியளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில், 2,780 மெ.டன் யூரியா; 891 மெ.டன் டி.ஏ.பி; 849 மெ.டன் பொட்டாஷ்; 5,677 மெ.டன் காம்ப்ளக்ஸ்; 657 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தென்னை மரத்துக்கு நீரில் கரையக்கூடிய வெள்ளை பொட்டாஷ் உரம் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., விலை, அதிகமாக உள்ளதால், அதற்கு மாற்றாக, கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்து அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
(அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் - 20:20:0:13, என்.பி.கே., 15:15;15. என்.பி.கே., 16:16:16) சூப்பர் பாஸ்பேட் உரத்தை எண்ணெய் வித்து பயிர்களில் டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது.
டி.ஏ.பி., உரம், மண்ணில் உப்பு தன்மை ஏற்படுத்துகிறது; சூப்பர் பாஸ்பேட் உரம், டி.ஏ.பி., உரத்தை விட குறைந்தளவே இத்தன்மையை ஏற்படுத்துகிறது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி., 1,350 ரூபாய்; சூப்பர் பாஸ்பேட் 610 ரூபாய்; அம்மோனியம் பாஸ்பேட், 1,220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.