/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டி.ஏ.பி.,க்கு பதில் சூப்பர் பாஸ்பேட்'
/
'டி.ஏ.பி.,க்கு பதில் சூப்பர் பாஸ்பேட்'
ADDED : டிச 12, 2024 11:54 PM
திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் அறிக்கை: கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகரித்துள்ளது. டி.ஏ.பி., உரம் 50 கிலோ, 1,350 ரூபாயாக உள்ளது. சூப்பர் பாஸ்பேட் (50 கிலோ), 610 ரூபாய்; அமோனியம் பாஸ்பேட் 1,220 ரூபாயாக உள்ளது. டி.ஏ.பி.,க்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் வித்து பயிர்களுக்கு பயன்படுத்தும்போது, மகசூல் அதிகரிப்பதுடன், எண்ணெய் உற்பத்தியும் உயரும். டி.ஏ.பி., உரம், மண்ணில் உப்புத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது; சூப்பர் பாஸ்பேட் உரம், குறைந்தளவே உப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.