/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை
/
பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை
ADDED : ஏப் 15, 2025 11:44 PM
அனுப்பர்பாளையம்; பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து, ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, பிச்சம்பாளையம், துரைசாமி புரத்தில் லில்லி மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் சரியாக பொருட்கள் வினியோகிப்பதில்லை.
விற்பனையாளர் சரியான நேரத்திற்கு வருவதில்லை என, பொதுமக்கள் அழைக்கழிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று காலை பொதுமக்கள் போருட்கள் வாங்க சென்றபோது, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி பழுதாகி விட்டதால், பொருட்கள் வழங்க முடியாது என விற்பனையாளர் கூறி உள்ளார். இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ரோஷன் கடையை முற்றுகையிட்டு, கோஷமிட்டனர்.
தொடர்ந்து, குடிமை பொருள் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரி வரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். உடனே, குடிமை போருள் தாசில்தார் உமாராணி அப்பகுதிக்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அனைத்து பொருட்களும் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

