ADDED : ஜூலை 07, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. உடுமலை வழியாக தினமும் 4 ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களிலிருந்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.