/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிறுத்தப்பட்ட பணி மீண்டும் மும்முரம்
/
நிறுத்தப்பட்ட பணி மீண்டும் மும்முரம்
ADDED : ஆக 17, 2025 11:42 PM

திருப்பூர்; மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி மீண்டும் மும்முரமாகத் துவங்கியது. திருப்பூர் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் ஏ.டி., காலனியில் அப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிப்பிடம் இருந்தது.
கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், மிகவும் பழுதானது. இதையடுத்து அதை முழுமையாக மூடிவிட்டு புதிய கழிப்பிடம் கட்ட தீர்மானித்து பணிகள் துவங்கியது. இதன் கட்டுமானப் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது. பழைய கழிப்பிடமும் மூடப்பட்டது.இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டி படத்துடன் செய்தி வெளியானது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது மும்முரமாக மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. கழிப்பறைகளில் கதவு பொருத்தி, முன்புறம் இரும்பு கிரில்கள் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், மின் இணைப்புக்கு ஒயர்கள் அமைத்து, எலக்ட்ரிக் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் கழிப்பிடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிகிறது.அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.