/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி இறப்பில் சந்தேகம்; உறவினர்கள் முற்றுகை
/
தொழிலாளி இறப்பில் சந்தேகம்; உறவினர்கள் முற்றுகை
ADDED : ஏப் 16, 2025 10:54 PM

பல்லடம்; பல்லடம் அடுத்த, வேலம்பாளையம் மூணுமடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45. கூலித் தொழிலாளி. கடந்த 13ம் தேதி ஒப்பந்த பணிக்காக ஒட்டன்சத்திரம், சீராகவுண்டம்புதுார் கிராமத்துக்குச் சென்றார். பணி முடிந்து சக தொழிலாளர் களுடன், வேனில் பல்லடம் புறப்பட்டார்.
பல்லடம்-, தாரா புரம் ரோட்டில், கட்டுப்பாட்டை இழந்த வேன், மையத்தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. பாலகிருஷ்ணன், படுகாயமடைந்தார். உடன் வந்த சிலர் காயங்களுடன் தப்பினர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், நேற்று பலியானார்.
இந்நிலையில், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனை, பாலகிருஷ்ணனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். உறவினர்கள் கூறுகையில், 'பாலகிருஷ்ணன் வேனின் முன்புறம் இருந்ததற்கான அடையாளமாக, வேனின் முன்புறம் ரத்தம் சிதறியுள்ளது.
உடன் வந்த ஒருவரும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், பாலகிருஷ்ணன் வேனின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்ததாக தவறாக கூறப்படுகிறது' என்றனர்.
விசாரித்த போலீசார், 'விபத்து ஏற்பட்டதாக மட்டுமே புகார் மனு பெறப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், வேனின் முன்புறம் அமர்ந்திருந்தாரா அல்லது பின்புறம் இருந்தாரா என்பது குறிப்பிடப்படவில்லை.
ரத்த பரிசோதனை செய்யப்பட்ட பின், இது குறித்து உறுதி செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்படும்' என்றனர். இதையடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.