/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுவாமி ஆராட்டு விழா; பக்தர்கள் தரிசனம்
/
சுவாமி ஆராட்டு விழா; பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 15, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: குமரலிங்கம் வண்டிப்பேட்டை உச்சி காளியம்மன் கோவில் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 9ம் ஆண்டு, ஐயப்ப சுவாமி ஆராட்டு விழா நடந்தது.
மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில், வண்டிப்போட்டை உச்சி மகாளியம்மன் கோவில் உள்ளது. குமரலிங்கம் அருகே அமராவதி ஆற்றில், ஐயப்ப சுவாமி உற்சவருக்கு ஆராட்டு விழா நடத்தப்பட்டு, திருவீதி உலாவாக இக்கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், குமரலிங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

