ADDED : அக் 04, 2024 12:25 AM
n ஆன்மிகம் n
திருக்கல்யாண வைபவ விழா
ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், காட்டூர், பொங்கலுார், பல்லடம். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 9:45 மணி. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 1:30 மணி. ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, சமேத கல்யாண வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. திருவிளக்கு பூஜை - இரவு 7:30 மணி.
சிறப்பு அபிேஷகம்
வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை - காலை 11:00 மணி.
சண்டியாக பெருவிழா
ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
நவராத்திரி விழா
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.
n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.
n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ ஜய துர்கா ேஹாமம், ஸ்ரீ திரிஷ்டி துர்கா ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ தாராதேவி மூல மந்திர சம்புடீகரண ஸ்ரீ பிரத்தியங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. பிரம்மச்சாரணி தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. மதுரை மீனாட்சியம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி.
n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
புரட்டாசி சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
ஒப்புவித்தல் போட்டி
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், திருப்பூர். ஏற்பாடு: வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
தொடர் போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, போராட்டம், ராசிபாளையம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
n பள்ளி மாணவருக்கான ஆதார் சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார், திருப்பூர். ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
என்.எஸ்.எஸ்., முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. 'மாணவர்களும் சமூக வலைதளங்களின் பயன்பாடு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - காலை 10:00 மணி.
n நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொரவலுார். ஏற்பாடு: சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையம். முகாம் நிறைவு விழா - மாலை 5:00 மணி.
n 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' எனும் தலைப்பில் என்.எஸ்.எஸ்., முகாம், சமுதாய நலக்கூடம், காட்டூர், பொங்கலுார். ஏற்பாடு: பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி. முகாம் நிறைவு விழா - மாலை 5:00 மணி.