ADDED : அக் 19, 2024 11:37 PM
n ஆன்மிகம் n
திருக்கல்யாண உற்சவம்
ஸ்ரீ காரணப் பெருமாள் கோவில், ஸ்ரீ தேவி, பூதேவி கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். சுவாமி ஆற்றுக்கு செல்லுதல் - காலை 6:00 மணி. பந்த சேர்வு திருக்கவால பூஜை - மதியம் 12:00 மணி. உற்சவ மூர்த்தி திருவீலா உலா வருதல், சப்பரம் மெரவனை வருதல் - மதியம் 1:00 மணி. ஹரிசேவை பூஜை - இரவு 7:00 முதல், 9:00 மணி வரை.
பிரம்மோற்சவம்
விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் பரம்பரை அறக்கட்டளை. உற்சவருக்கு விசேஷ மகா திருமஞ்சனம் - காலை 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
ஆன்மிக சொற்பொழிவு
'ஆன்மிக வாழ்க்கை' எனும் தலைப்பில் சொற்பொழிவு, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: ஸ்ரீ மத் சுவாமி விமோக் ஷானந்தர், காலை, 10:30 முதல் மதியம், 12:45 மணி வரை.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம் ஐயா. மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பயிற்சி வகுப்பு
தேவார, திருவாசக, திருப்புகழ் இசைப்பயிற்சி வகுப்பு, சேக்கிழார் அரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை.
n பொது n
இலவச கண் சிகிச்சை முகாம்
லயன்ஸ் கிளப் அலுவலகம், டவுன்ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் லயன்ஸ் கிளப், ஆர்.கே., டெக்ஸ். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம்
விவா மருத்துவமனை, தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப், அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சேவாபாரதி. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
நல உதவி வழங்கல்
தீபாவளியை கொண்டாட குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு, காரம் வழங்கும் நிகழ்ச்சி, சேவா சமிதி, வஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: என்.எம்.சி.டி., அறக்கட்டளை. காலை 10:30 மணி.
செயல்வீரர் கூட்டம்
புதிய உறுப்பினர் அட்டை வழங்கல், செயல்வீரர் ஆலோசனை கூட்டம், பிருந்தாவன் திருமண மண்டபம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., மாலை 3:00 மணி.
பதிவு முகாம்
உடல் உறுப்பு, கண் தான பதிவு முகாம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. ஏற்பாடு: நம்பிக்கை நமது அமைப்பு, லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் யங் ஏங்கர் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.
பயிற்சி வகுப்பு
சிறுதானிய மரபு தின்பண்டங்கள் செய்முறை பயிற்சி வகுப்பு, இயல்வாகை குழந்தைகள் நுாலகம், ஊத்துக்குளி. காலை, 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.
குளத்தில் களப்பணி
அத்திக்கடவு - அவிநாசி நீர் வழித்தட பாதை, சங்கமாங்குளம், ராயம் பாளையம் ரோடு அவிநாசி. காலை 7:00 முதல், 9:00 மணி வரை. ஏற்பாடு: குளம் காக்கும் நண்பர்கள் அமைப்பு.
யோகாசன பயிற்சி
யோகா பயிற்சி, மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.
n எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
துணை முதல்வர் உதய நிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை, 8:00 மணி முதல்.
சதுரங்க போட்டி
'கதிரவன் டிராபி' - மாவட்ட சதுரங்க போட்டி, கதிரவன் மெட்ரிக் பள்ளி, பல்லடம் ரோடு, மங்கலம். ஏற்பாடு: பாரதி செஸ் அகாடமி. காலை 10:00 மணி முதல்.
கோ கோ போட்டி
'கேலோ இந்தியா' லீக் சீனியர் பெண்கள் கோ கோ போட்டி, ஸ்ரீ வாணி இன்டர்நேஷனல் பள்ளி, பல்லடம். ஏற்பாடு: மாநில கோ கோ அசோசியேஷன், கோவை மாவட்ட கோ கோ சங்கம். காலை 9:00 மணி முதல்.