/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பதி பெருமாளுக்கு திருப்பூரில் ஊஞ்சல் சேவை
/
திருப்பதி பெருமாளுக்கு திருப்பூரில் ஊஞ்சல் சேவை
ADDED : ஜன 02, 2026 05:44 AM
திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளியில் நாளை ஊஞ்சல் சேவை நடக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரா சுவாமி, திருப்பூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஊஞ்சல் சேவை நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி, திருப்பூர், பல்லடம் ரோடு, கணபதிபாளையம் பிரிவில் உள்ள விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளியில் நாளை மதியம், 1:00 மணிக்கு நடக்கிறது.
அதில், அபிஷேக சங்கல்பம், நீராட்டம், தோமாலை, நைவேத்தியம், தீபாராதனை, மஹா மங்கள ஹாரத்தி உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி, வேத பாரதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மண்டலி செய்துள்ளனர்.

